• Jan 14 2025

இது என் வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாகவே இருக்கும்"- விஜயகாந்த் சமாதியில் கண்ணீர் வடித்த நடிகர் கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 8 வருடங்களாகவே உடல் நலமின்றி வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கடந்த 27-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், 28-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த, திரையுலக பிரபலங்களையும், மக்களையும் தேமுதிக தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 


விஜயகாந்த் உயிரிழந்தது முதல் தற்போது வரை பலர் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருவது மட்டும் இன்றி, விஜயகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் உள்ள விஜயகாந்த் மனைவி மற்றும் மகன்களை சந்தித்து, தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.

அந்த வகைில் நடிகர் கார்த்தி தற்பொழுது அவர் சாமதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது கண்கலங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விஜயகாந்த் சேரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை என்பது என்னோட வாழ்நாள் குறையாக இருக்கும்.


எனக்கு கேப்டன் படத்தில் நடிப்பதற்கு வாயப்புக் கிடைத்தது இல்லை, நடிகர் சங்கத்தில் ஜெயிச்சதற்கு அவர் கிட்ட சொன்னப்போ ரொம்ப சந்தோசப்பட்டாரு, ஒரு தலைவர் என்றால் இறங்கி வேலை செய்யனும் என்று அவர் கிட்ட தான் கற்றுக் கொண்டோம்.அmவர் இப்போ இல்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கு என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement