பிக்பாஸ் சீசன் 8 இந்தவாரம் குடும்பத்தார் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.பேமிலி ரவுண்ட் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
அந்தவகையில்தீபக்,சவுண்டு,ரானவ்,ராயன்,அன்ஷிதா,மஞ்சரி ஆகியோரின் வீட்டார் கடந்த எபிசோட்களில் வந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஜெபிரி,அருண், முத்து ,ஜாக்குலின் ஆகியோரின் வீட்டிலுள்ளவர்கள் வருகை தந்துள்ளனர்.தற்போது இன்றைய நாளுக்கான 4 ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.வீட்டிற்குள் வந்த ஜாக்குலினின் அம்மா அனைவருடனும் மிகவும் அன்பாக பேசியிருந்தார்.அவ மேல தப்பு இருந்தா டைரக்டா சொல்லிருங்கப்பா அவள் அழுகிற ஒரு ஆளே கிடையாது இங்க வந்து தான் அவள் அழுதே பாத்திருக்கன் என்று கூறினார்.
பின்னர் வீட்டாருடன் ஜாக்குலின் கதைக்கும் போது "12 வாரமும் நான் மட்டும் தான் நாமினேஷன்ல இருக்கன்" என அழுது கொண்டே சொன்னார் அதற்க்கு அவரது அம்மா "3 வீக்ஸ் விளையாடிட்டு டைட்டில் வின்னரா வர்ரா நான் எதிர்பார்க்கிறேன்"என கூறியுள்ளார்.
Listen News!