• Dec 25 2024

ஓ மை காட்! நெல்சன் போட்ட முக்கிய கண்டிஷன்! வெளியானது ஜெயிலர் 2 அப்டேட்....

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சினிமாவில் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாரான இவருக்கு வரும் 12ம் தேதி 74 வயது பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவரது திரைப்படங்களின் அப்டேட் வெளியாக உள்ளது. 


தற்போது ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அப்டேட்களும் அவ்வப்போது இணையத்தில் கசிந்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.


மேலும் நெல்சன் இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.


நெல்சன் ஜெயிலர் 2 படத்தை எடுப்பதற்கு குறைந்தது 13 மாதமாவது டைம் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தான் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என கூறப்படுகிறது.  இந்நிலையில் தலைவரின் பிறந்தநாள் "தளபதி ரீ ரிலீஸ், கூலி அப்டேட், ஜெயில் 2 ப்ரமோ வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு 3 ட்ரீட் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

Advertisement

Advertisement