• Jul 23 2025

ஜேசன் சஞ்சய் படமும் டிராப்? கைகொடுக்கும் அஜித்.. என்ன செய்ய போகிறார்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அந்த படம் ட்ராப் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜேசன் சஞ்சய்  இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனை அடுத்து திரைக்கதையை முழுவதுமாக தயார் செய்த ஜேசன் சஞ்சய்  ஹீரோவை தேடி சில மாதங்கள் அலைந்தார்.

கவின், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உள்பட சில ஹீரோக்கள் இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எந்த ஹீரோவும் செட் ஆகவில்லை என்று தெரிகிறது. மேலும் ஒரு சில ஹீரோக்கள் திரைக்கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது.



இந்த நிலையில் அடுத்தடுத்து லைகா நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் தோல்வி பெற்று வரும் நிலையில் படம் தயாரிப்பதை அந்த நிறுவனம் நிறுத்த போவதாக கூறப்படுகிறது. லால் சலாம், சந்திரமுகி 2, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் இனி திரைப்படங்கள் தயாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் ஜேசன் சஞ்சய் திரைப்படம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அந்த படம் மட்டும் தயாரிப்பில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படமும் டிராப் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய்க்கு அஜித் உதவ முன் வந்துள்ளதாகவும் அவர் தனக்கு தெரிந்த ஒரு முன்னணி தயாரிப்பாளரிடம் இந்த படத்தை தயாரிக்க பரிந்துரை செய்ததாகவும் அஜித்துக்காக இந்த படத்தை தயாரிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement