• Dec 29 2024

ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு லைவா காட்சி கொடுக்கும் ஹாரிஸ்? இதல்லவோ ட்ரீட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் தான் பிரதர். இந்த படம் பற்றி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இதில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, சீதா, வி டிவி கணேஷ், பிரபல தெலுங்கு நடிகரான ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள் இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரதர் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்த இசை வெளியீட்டு விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ் லைவ்வாகவே இசைக்கச்சேரி நடத்தி பாடல்களை ரிலீஸ் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பட குழு திட்டமிட்டு உள்ளது என கூறப்படுகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement