• Dec 27 2024

ஜெயம் ரவியின் விவாகரத்து நிஜமா? எல்லாத்துக்கும் மாமியார் தான் காரணம்! பயில்வான் அதிரடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை என்ற வசனத்தை குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ச்சியாக பல விவாகரத்துக்கள் இடம் பெற்று வரும் நிலையில், ஜெயம் ரவியும் தனது காதல் மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனாலும் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆர்த்தி பதிலடி கொடுத்திருந்தார். இதன் காரணத்தால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம் தொடர்பில் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், ஜெயம் ரவியின் மனைவி தான் ஆர்த்தி, இருவரும் கல்லூரி படிக்கும் போதே காதலித்தார்கள், பின்பு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார்கள், இவரின் தாயார் சுஜாதா விஜயகுமார். இவர் பெரும் பணக்காரர்,

ஜெயம் ரவியின் மாமியார் சன் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்களை தயாரித்துள்ளதோடு தனது மருமகனான ஜெயம் ரவியை வைத்து இரண்டு, மூன்று படங்களையும் தயாரித்து உள்ளார். ஆனால் அவை சரியாக ஓடவில்லை.

இப்போது அவர்கள் இருவருக்கும் விவாகரத்து பேச்சு வருவதற்கு காரணமே ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ஜெயக்குமார் தான். ஏனென்றால் எந்த தயாரிப்பாளர் கதை சொல்ல வந்தாலும் ஜெயம் ரவி முதலில் மாமியாரிடம் சொல்லுங்கள் அவர் ஓகே என்றால் கதையை கேட்கிறேன் என்றுதான் சொல்வாராம்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் யாரோ ஒருவர் தான் இந்த கதை கிளப்பி விட்டுள்ளார். ஆனால் இந்த விவாகரத்து வதந்தி கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement