• Dec 26 2024

மீனா எடுத்த சபதத்தால் பேரதிர்ச்சிக்கு உள்ளான முத்து.. உடையப் போகும் விஜயா குடும்பம்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் அண்ணாமலை தனது நண்பரை இன்ஜினியருடன் வரச் சொல்கின்றார். என்ன விஷயம் என்று கேட்க, ரூம் கட்ட வேண்டும்  என சொல்லுகிறார்.

அதற்கு எவ்வளவு செலவாகும் என கேட்க, கிட்டத்தட்ட 5 லட்சம் செலவாகும் என சொல்கின்றனர். அதற்கு ஐஞ்சு லட்சத்துக்கு எங்கப்பா போறது என முத்து கேட்க, அதற்குத்தான் வீட்டுப் பத்திரம் இருக்குதுல்ல என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

இதன் போது விஜயா, கடன் வாங்க வீட்டு பத்திரத்தை அடகு வைக்க தர மாட்டேன் என சொல்ல, அண்ணாமலை இதை நினைத்து பீல் பண்ணுகிறார்.


அந்த நேரத்தில் முத்துவும் ஃபீல் பண்ணி கதைக்க, அங்கிருந்த ரோகினி திரும்பவும் சபதம் எதுவும் போட்டுறாதீங்க என கிண்டலாக முத்துவுக்கு சொல்லுகிறார்.

இதை கேட்ட மீனா, அவர் உழைச்சி கட்டாயம் மேல ரூம் கட்டுவார். இது நான் எடுக்கிற சபதம் என அண்ணாமலை மீது சொல்லுகிறார். இதைக்கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார்.

இவ்வாறு இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஒருவேளை மீனா போட்ட சபதம் நிறைவேறி, இந்த குடும்பம் இரண்டாக பிரியுமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement