• Dec 25 2024

எல்லோர் முன்னாடியும் செழியனை ஓங்கி அறைந்த ஜெனி- பாக்கியாவையும் பிரச்சினையில் கோர்த்து விட்ட மாலினி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மாலினி செழியன் தன்னை ஏமாற்றி விட்டதாக பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகின்றார். அத்தோடு பாக்கியாவுக்கும் இது தெரியும் பாக்கியா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றும் சொன்னாங்க என பாக்கியாவையும் கோர்த்து விடுகின்றார்.இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.


இருந்தாலும் ராமமூர்த்தி செழியன் பண்ணினது தப்பு என்றால் நீ பண்ணினதும் தப்பு முதலில் நீ இங்கிருந்து போ என்று சொல்லி விரட்டி விட மாலினி எனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் விடமாட்டேன் என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.தொடர்ந்து மாலினி போனதும் எல்லோரும் பாக்கியாவைத் திட்டுகின்றனர்.

அத்தோடு இதை முதலில் எங்க கிட்ட சொல்லி இருக்கலாம் தானே என்று கோபி கேட்க, பாக்கியா உங்க கிட்ட சொல்ல முயற்சி செய்தேன் ஆனால் முடியல என்று சொல்ல, ஈஸ்வரி என்கிட்ட சொல்லியிருக்கலாம் தானே என்று கேட்க பாக்கியா உங்க கிட்ட எப்படி அத்தை சொல்லுறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜெனி என் கிட்ட சொல்லியிருக்கலாம் தானே என சண்டை பிடிக்கின்றார்.


என் கிட்ட எதுக்கு மறைச்சீங்க இவன் என்ன தப்பு பண்ணினாலும் அதை மன்னிச்சு அவன் கூட நான் வாழனுமா என்று கேட்க அந்த நேரம் இடையில் செழியன் பேச வர செழியனை ஓங்கி அறைவிடுகின்றார். தொடர்ந்து நான் என்ன குறை வைச்சேன். எதுக்காக அவகிட்ட போன அவளைப் பார்த்திட்டு தான் நான் அம்மா வீட்டை இருக்கும் போது பார்க்க வந்தியா என பல கேள்விகளைக் கேட்கின்றார்.


அத்தோடு இனிமேல் நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன்,என் குழந்தைக்கும் இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என வீட்டை விட்டு கிளம்புகின்றார். பாக்கியா தான் கொண்டு போய் விடுவதாக சொல்ல, ஜெனி உங்க பையனுக்கு தானே சர்ப்போட் பண்ணுவீங்க அவன் இன்னும் எத்தனை பொண்ணுங்க கூட பேசிட்டு இருக்கிறான் என்று கண்டு பிடிங்க என்று சொல்லி விட்டு கிளம்பிப் போகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement