• Dec 27 2024

ஆஸ்கர் விழாவிற்கு ஆடையின்றி வந்த ஜான் சீனா! அதிர்ச்சியில் திக்குமுக்காடிய ஆடியன்ஸ்! வைரல் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா, இன்றைய தினம் லாஸ் ஏஞ்சல்சின் டொல்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

உலக திரையுலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது,  சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர், உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி,  96வது ஆஸ்கர் விருது  லாஸ் ஏஞ்சல்சின் உள்ள டொல்பி திரையரங்கில் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நிலையில், ஆஸ்கர் விழாவில் வித்தியாசத்தை காட்டுவதாக நினைத்த ஜான் சீனா,  ஆடையின்றி மேடைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மல்யுத்த வீரராக இருந்து நடிகராக மாறிய ஜான் சீனா, ஆஸ்கர் மேடையில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை  'புவர் திங்ஸ்' என்ற படத்திற்கு வழங்கினார்.


இவ்வாறு அவர் விருது வழங்கும் நிகழ்விற்கு ஆடையின்றி வந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதன் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் 1974ஆம் ஆண்டு 46 வது ஆஸ்கர் விருதுகளின் போதும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக சுட்டிக்காட்டினார்.

96 வது அகாடமி விருதுகளில்  'புவர் திங்ஸ்' படம் மொத்தம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement