• Dec 27 2024

வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட ரோகிணி! பூமர் மாமியாரை அசிங்கப்படுத்திய ஸ்ருதி! கூனிப்போன விஜயா

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரவி எல்லாருக்கும் சாப்பாடு செய்ய முத்து ஹெல்ப் பண்ணுகிறார். மனோஜை எதாவது ஹெல்ப் பண்ண சொல்ல, முடியாது என்று சொல்லி, நாங்க ஹோட்டலில் ஓடர் பண்ணி சாப்பிட போவதாக சொல்கிறார். ரோகிணியும் நானும் இந்த சாப்பாடு சாப்பிட மாட்டேன் ஓடர் பண்ணி சாப்பிடுறம் என்று சொல்லுகிறார்.

இதையடுத்து மனோஜ் மற்றும் ரோகினையும் மாறி மாறி ஹோட்டலில் சாப்பாடு இருக்கா என செக் பண்ண, அது டபுள் விலையில் காட்டுகிறது. இதை அடுத்து வேறு வழி இன்றி மனோஜ் ரகசியமாக கிச்சனில் சென்று சாப்பிட, உள்ளே ரோகிணியும் மறைமுகமாக இருந்து சாப்பிடுவதை பார்க்கிறார்.

அதன்பின், இருவரும் மாறி மாறி சாப்பாட்டை ஊட்டி விட்டு சாப்பிட,  அங்கு முத்து வந்து இருவரும் ஒழிந்து இருந்து சாப்பிடுவதை பார்த்துவிடுகிறார். ஆனாலும் ஒன்றும் பேசாமல் அவர்களுக்கு தண்ணியை எடுத்து வைத்து விட்டு செல்கிறார்.


இன்னொரு பக்கம் ரவி சமைத்த சாப்பாட்டை எல்லோரும் நல்லா இருக்குது என புகழ்ந்து சாப்பிடுகிறார்கள். இதன்போது சீதா ரவியுடன் சிரித்து பேசுவதை பார்த்த விஜயா, ஸ்ருதியை தனியாக அழைத்துச் சென்று சீதா பற்றி தப்பாக சொல்கிறார். மேலும் பார்க்கிறவங்க என்ன நினைப்பார் என சொல்கிறார்.

அதன் பின் ஸ்ருதி அப்படி ஒன்றும் தப்பா இல்லையே என சொல்லி  விஜயாவை வெளியே அழைத்து வந்து, உங்க எல்லாருக்கும் ரவி, சீதா பேசுறது தப்பா தெரியுதா? என எல்லாரிடமும் தனித்தனியாக கேட்கிறார்.

அதற்கு எல்லோரும் அப்படி இல்லையே, எங்க சீதா பற்றி எங்களுக்கு தெரியும் என சொல்ல,  எல்லார் முன்னிலையிலும் யாருக்கும் தப்பா தெரியல உங்க ஜெனரேஷன் அப்படி.. இப்போ மாமாவோட பிரண்ட்ஸ் உங்க கூட கதைச்சா அது தப்பா போயிருமா என விஜயாவை எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துகிறார் ஸ்ருதி. இதை பார்த்து பார்வதி சரியான மருமகள் தான் விஜயாவுக்கு வந்திருக்கு என உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார்.

மறுபக்கம் சத்யா சிட்டி வீட்டிற்கு செல்ல, அங்க பார்ட்டி நடக்கிறது. இதன்போது சிட்டி ஏன் உன் தங்கச்சி மீனா வீட்டுக்கு போனா? என கேட்க, மீனா அக்காக்கு 500 மாலை ஆர்டர் வந்திருக்கு அதனால ஹெல்ப் பண்ண போயிருக்கான்னு சொல்கிறார் சத்யா.

இதை அடுத்து சிட்டி தனது ஆட்களிடம் அந்த 500 மாலையும்  நாளைக்கு மினிஸ்டர் வீட்டுக்கு போக கூடாது அப்படி என்று பிளான் பண்ணுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement