• Dec 25 2024

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ஜோவிகா! தன் மகள் உட்பட குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணிய வனிதா! திடீரென என்னாச்சு?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.


இவ்வாறு 60 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது.

தற்போதைய நாட்களில் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ஜோவிகா தூங்குவதால் ரசிகர்கள் அதிருப்தி அடித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், 

'பிக் பாஸ் வீட்டுல அவ ட்ரெஸ்ட்டா இருக்கா.. எனக்கு தெரியும் அந்த வீட்டுல நானும் இருந்துட்டு தான் வந்து இருக்கன். கொஞ்சம் ட்ரெஸ்ட்டா  இருந்தா தூங்க தான் தோணும்.. அதோட ஜோவிகா கண்ட கனவு அவள தனிம படுத்துடுச்சு..அதால அவ ரொம்ப ட்ரெஸ்ட்டா இருக்கா... என ஜோவிகாவின் தூக்கத்திற்கு விளக்கம் கூறியுள்ளார் வனிதா.


இந்த நிலையில், ஜோவிகாவின் தாயாரான நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோவிகா மற்றும் குழந்தைகளுக்கு அட்வைஸ் கொடுக்கிற மாதிரி பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில்," நம் பிள்ளைகள் நமக்குத் தேவைப்படுகிறதை காட்டிலும் நம்முடைய ஆன்மாவுக்கு தேவை... சில நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறியிருக்கிறார். 

Advertisement

Advertisement