• Apr 24 2026

'மிஸ்டர் மனைவி' சீரியல் நடிகருக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி புகழுக்கு டூப் போட்டது போல் இருக்கும் குருவி தமிழ்ச்செல்வன், தனது காதலியை திருமணம் செய்துள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் குருவி தமிழ்ச்செல்வன்.

இவர் முதன்முதலில் 'அபியும் நானும்' என்ற  சீரியலில் குருவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் குருவி தமிழ்செல்வன் என்று அழைத்து வருகிறார்கள்.


இதை தொடர்ந்து, தற்போது 'மிஸ்டர் மனைவி', 'புதுவசந்தம்' போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் குருவி தமிழ்ச்செல்வன். .

இவ்வாறு தனது நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர், அண்மையில் தான் தனது காதலி பூர்ணிமாவை நவம்பர் 28ம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமணம் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.


இவரது திருமணத்தில் சன் டிவி சீரியல் திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். தமிழ் செல்வனும் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இதேவேளை, குக் வித் கோமாளி புகழைப் போலவே, பல கோமாளித்தனங்களை செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர் குருவி தமிழ்செல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement