• Dec 28 2024

ஜோவிகா ரொம்பவும் சின்சியரானவர்.. வனிதா மகள் பற்றி புகழ்ந்த பார்த்திபன்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா. ஆனாலும் இவர் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நபராக தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றார்.

விஜயகுமார் சினிமா துறையில் பிரபலமாக காணப்பட்டாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இவர் இரண்டு, மூன்று திருமணங்களுக்கு மேல் முடித்துள்ளார். இதனால் அடுத்த திருமணம் எப்போது என ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகின்றார்கள். ஆனாலும் தற்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார் வனிதா.

விஜய் டிவியில் இறுதியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா பங்கு பற்றி இருந்தார். இவருக்கு ஆரம்பத்தில் ஆதரவுகள் குவிந்த போதும் அதற்குப் பிறகு இவரும் அம்மா போல வாயாடி என நினைத்து பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்தார்.


இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, மாடலிங் செய்வதில் கவனத்தை செலுத்தினார். அதன் பின்பு இயக்குனரும் நடிகருமான பார்த்திபனுக்கு அசிஸ்டெண்டாக பணியாற்றினார்.

இந்த நிலையில், தற்போது பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பார்த்திபன் ஜோவிகா பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது ஜோவிகாவுக்கு வெளியில் ஒரு விம்பம் இருக்குது. ஆனால் என்னுடன் அந்த பிள்ளை பணி புரியும் போது எனக்கே பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கொடுத்த வேலையை மட்டும் தான் ஜோவிகா கவனமாக செய்கிறாள். 


நான் நிறைய தரம் நோட் பண்ணி இருக்கேன். ஒரு வேலையை கொடுத்தால் அந்த வேலையை செய்து முடிக்க மட்டும் தனது தலையைக் கூட வேறு திசையில் அசைக்க மாட்டார். அவ்வளவு சின்சியரானவர். எனக்கு பார்ப்பதற்கே பாவமாக இருக்கும்.

வனிதாவுக்கு தனது மகளை நடிகையாக்க வேண்டும் என்பதுதான் கனவு. ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது போல் அல்ல அவர் வேறுபட்டவர் என தனது கருத்தை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement