• Dec 26 2024

அப்படியே ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரியே இருக்காங்களே... இணையத்தில் வைரலாகும் பெண்ணின் வீடியோ..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அட ஆமாங்க உண்மையிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரியே இருக்காங்க என்று பலரும் சொல்லி வைரலாக ஒரு பெண்ணின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டு. யார் அந்த பெண் என்று தெரிந்து கொள்ளவோம் வாங்க.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நிறம் எல்லாம் தேவையில்லை, திறமை இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.காக்கா முட்டை, ரம்மி, கனா, வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார்.


ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் படங்களை தாண்டி சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெறுகிறார். 


2023ம் ஆண்டு மட்டுமே அவரது நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிட்சென், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி,  தீரா காதல் என  சில படங்கள் ரிலீஸ்  ஆகியுள்ளது. அடுத்தும் அவரது நடிப்பில் தமிழ், மலையாளம் என 4 படங்கள் தயாராகி வருகிறது.


சமீபகாலமாக பிரபலங்களை போலவே இருப்பவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ... 



Advertisement

Advertisement