• Dec 25 2024

லோகேஷ் கொடுத்த தலைவர் 171 நியூ அப்டேட்... குஷியில் குதிக்கும் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனராக மாறியவர் தான் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது அந்த திரைப்படம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.  


தலைவர் 171 பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும் என்று ஏற்கனவே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்து இருந்தார்.சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் திரைப்பட விழாவில் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தலைவர் 171 படத்தின் அப்டேட் கேட்கப்பட்டது.


அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "171 படத்தின் ஷூட்டிங் 2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இனி அடுத்த வாரத்தில் இருந்து திரைக்கதையை அமைக்க இருக்கிறோம்" என்று கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டார்கள்.     

Advertisement

Advertisement