• Feb 28 2025

காக்கா கா.. கா...னு தான் கத்தும்.....!தமிழ் மொழிக்கு விளக்கம் கொடுத்த வடிவேல்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மொழி நம்முடைய அடையாளம் என்பதற்குக் காவியம் சொல்லும் அளவிற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சமீபத்தில், பிரபல நடிகர் வடிவேல் தமிழ் மொழியின் எதிர்காலம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் "தமிழ் மொழிக்கு ஆபத்து என்பது வழக்கம் போல வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி உள்ளது, அதுவே அந்த மாநிலத்தின் அடையாளம். தமிழ்நாட்டிற்கு, தமிழ் தாய் தான் அடையாளம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியின் நிலைமை குறித்து கவலைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன என்று கூறியதுடன் நவீன காலத்தில், பல உலக மொழிகள் தமிழ் மொழியின் நிலையை பாதிக்கக்கூடிய வகையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்றார்.


ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியொரு மொழி இருக்கிறது. மொழி என்பது அந்த மாநிலத்தின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டிற்கு தமிழ் மொழியே அடையாளம். இதனை உறுதிப்படுத்தி பேச வேண்டும் என்பதே வடிவேலின் கருத்தாக காணப்பட்டது.

அத்துடன் தமிழ்நாட்டின் அடையாளம் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் என்றதுடன் "தமிழ் தாய்" என்ற கருத்து தமிழர்களின் வாழ்வின் முக்கிய அடையாளம் எனது தெரிவித்தார். தமிழ் மொழியை பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றார். இதற்கு "காகம் கா..கா னு தன்ர மொழியில் கத்தும், மாடு மா...மா னு அதின்ர மொழியில் கத்தும்" என விளக்கம் கொடுத்தார்.


தமிழ் மொழி இந்தியாவின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது உலகிலும் முதன்மையான இலக்கியங்களை கொண்டுள்ள மொழியாக திகழ்கிறது. எனவே அதை வளர்ப்பதும் பாதுகாப்பதும்  நம்முடைய பொறுப்பு என்றார்.

Advertisement

Advertisement