• Dec 25 2024

எவண்டா இந்த படத்தின் டைரக்டர்? வரும் வெள்ளியன்று வெளியாகும் படத்தின் விளம்பர வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள திரைப்படத்தின் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் படக்குழுவினர் தங்களை தாங்களே கலாய்த்து கொள்ளும் வகையில் எவன்டா இந்த படத்தின் டைரக்டர் என்ற வசனத்தையும் சேர்த்து வைத்துள்ளது விளம்பர யுக்தியாக பார்க்கப்படுகிறது.

கலையரசன் , நடன இயக்குனர் சாண்டி, குக் வித் கோமாளி போட்டியாளர் அம்மு அபிராமி, பிக் பாஸ் ஜனனி உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ’ஹாட்ஸ்பாட்’. ’திட்டம் இரண்டு’ உள்பட சில படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியான போது அதில் கெட்ட வார்த்தைகள், ஆபாச காட்சிகள், கிளாமர் காட்சிகள், கலாச்சாரத்தை கெடுக்கும் காட்சிகள் இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் படக்குழுவினர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் முடிந்து ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வித்தியாசமான விளம்பர வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படத்தின் டிரைலருக்கு கண்டனம் தெரிவித்தவர்களின் கருத்துக்கள், குறிப்பாக ’எவன்டா இந்த படத்தின் டைரக்டர்’ என்று ரசிகர்கள் கூறியது உள்பட பல்வேறு காட்சிகள் இருப்பதை பார்த்து இந்த வீடியோ வித்தியாசமான விளம்பர யுக்தியாக பார்க்கப்படுகிறது என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த கலையரசன் உள்பட பலர் இந்த படம் குறித்து கூறிய போது ட்ரெய்லரை பார்த்து இந்த படம் மோசமான படம் என்று நினைக்க வேண்டாம் உண்மையாகவே சமூக கருத்துள்ள படம் என்று கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement