• Dec 25 2024

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மீண்டும் வனிதாவா? விதியை மாற்றுகிறதா விஜய் டிவி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு சீசனில் கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள முடியாது என்றும் ஒரு சில எபிசோடுகளில் சிறப்பு விருந்தினராக மட்டும் கலந்து கொள்ள முடியும் என்பதும் தெரிந்தது.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் என்னை எதிர்பார்க்கலாம் என நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு வனிதாவுக்காக விதிகளை தளர்த்தி உள்ளதா விஜய் டிவி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

குக் கோமாளி என் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த சீசனில் புரமோ வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்தது. தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் ஒரு சில புதிய கோமாளிகளும் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை வனிதாவிடம் சில ரசிகர்கள் உங்கள் மகள் ஜோதிகாவை ‘குக் வித் கோமாளி சீசன் 5ல் எதிர்பார்க்கலாமா என்று கேட்டபோது ஜோதிகா தற்போது பிஸியாக இருக்கிறார், அடுத்தடுத்து அவருக்கு அதிகமாக வேலைகள் இருக்கிறது, அதனால் ஜோதிகாவை எதிர்பார்க்க முடியாது, ஆனால் என்னை எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதில் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார் என்பதும் டைட்டில் வின்னர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் அவர் என்னை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து போட்டியாளராக வருகிறாரா? அல்லது ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வருகிறாரா? அல்லது ஆங்கர் ஆக வருகிறாரா என்பதை புரிந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement