• Feb 26 2025

சினேகன்-கன்னிகா குழந்தைகளிற்கு தங்கத்தில் பரிசளித்த கமல்.!

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல பாடலாசிரியர் சினேகன் அவர்கள் எழுதிய பெரும்பாலான பாடல்கள் இவர் எழுதியது தானா என்பது சினேகன் பிக்போஸ் சென்றபோது தான் அனைவருக்கும் தெரியவந்தது. பல பெரிய நடிகர்களின் படங்களிற்கு மிகவும் அருமையான பாடல் வரிகளை வழங்கிய இவர் சிறந்த ஓவியரான கன்னிகாவினை திருமணம் செய்துகொண்டார்.


இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் இரட்டை பெண் தேவதைகள் பிறந்துள்ளனர்.இதனை சந்தோஷத்துடன் பதிவிட்ட  இந்த ஜோடி நீண்ட வருடங்களின் பின்னர் பிறந்த குழந்தைகளினை வாழ்த்துவதற்காக உலகநாயகன் கமலகாசன் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். வாழ்த்தியது மட்டுமல்லாமல் தங்க வளையல்களையும் அணிவித்துள்ளார்.


சினேகன் உலகநாயகனுடன் எடுத்த புகைப்படங்களினை தனது இன்ஸ்டாவில் மிகவும் அழகிய கவிதை ஒன்றுடன் "காதலர் தினத்தில் ...எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" கன்னிகா சினேகன் என்ற பெயரையும் "கவிதை " கன்னிகா சினேகன் என்ற பெயரையும் ..அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் காதல் - கவிதை-யை " பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement