• Dec 26 2024

அந்த நடிகை என் கணவரின் மனைவியல்ல..போலீஸ் கமிஷனருக்கு தர்ஷன் மனைவி எழுதிய கடிதம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா உள்பட 16 பேர் சமீபத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் ஆவணத்தில் தர்ஷனின் மனைவி பவித்ரா கவுடா என்று இருப்பதை அடுத்து அவருடைய உண்மையான மனைவி விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் தர்ஷன் மனைவி பவித்ரா கவுடா என்று உங்கள் ஆவணத்தில் பதிவு செய்துள்ளீர்கள் என்றும், இது தவறான தகவல் என்றும், பவித்ரா கவுடா ஏற்கனவே ஏற்கனவே சஞ்சய் சிங் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தை வைத்திருக்கிறார் என்றும் அவர் தர்ஷனின் மனைவி அல்ல என்றும் விஜயலட்சுமி என்ற நான் மட்டுமே தர்ஷனின் ஒரே மனைவி என்றும்  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



எனக்கும் தர்ஷனுக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி சட்டப்படி தர்மசாலாவில் திருமணம் நடந்தது என்றும், ஆனால் பவித்ரா கவுடா தான் தர்ஷன் மனைவி என பத்திரிகையாளர் சந்திப்பின்போது நீங்கள் தவறான தகவலை கூறியுள்ளீர்கள் என்றும் இந்த தகவல் ஊடகங்களின் வெளிவந்துள்ளதால் எங்கள் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே இந்த தவறை போலீஸ் பதிவேடுகளில் திருத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் சட்டம் கடமையை செய்யும் என்று நம்புகிறேன் என்றும் கூறிய விஜயலட்சுமி, பவித்ரா கவுடா, என் கணவரின் தோழி என்பது உண்மைதான், ஆனால் அவர் என் கணவனின் மனைவி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement