• Dec 26 2024

அஜித், விஜய்யை மட்டம் தட்டி பேசினாரா கார்த்திக் சுப்புராஜ்? ‘தளபதி 69’ வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒன்று அல்லது இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விட்டால் உடனே அஜித் மற்றும் விஜய் கால்ஷீட்டை இயக்குனர்கள் பெற்று விடுகிறார்கள் என்பதும் லோகேஷ் கனகராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பல இயக்குனர்கள் அஜித், விஜய் படத்தை இயக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து முன்னேறி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் நேற்று நடந்த திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அஜித், விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் , அஜித் மாதிரி பெரிய ஹீரோக்களை இயக்கும் படம் பண்ணுவது தான் ஒரு இயக்குனரின் இலக்காக ஆகிவிடக்கூடாது. நான் அஜித் விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 69’ படத்தின் இயக்குனர்களின் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ் பெயர் இருந்த நிலையில் அதன்பின் அவர் அந்த படத்தை இயக்கவில்லை என்றும் எச் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ’தளபதி 69’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ் அந்த ஏமாற்றத்தில் பேசுவதாக கூறப்பட்டாலும் கார்த்திக் சுப்புராஜ் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு இயக்குனர் அஜித், விஜய் படத்தை இயக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிராமல் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அந்தமானில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement