• Dec 27 2024

காரின் டிக்கியில் பிணத்தை வைத்திருந்தாரா நிவேதா பெத்துராஜ்.. போலீஸார் மோதலில் புதிய ட்விஸ்ட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது போலீசார் வாகன சோதனைக்காக அவருடைய காரை நிறுத்தினர் என்றும் காரின் டிக்கியை திறந்து காட்டுமாறு போலீசார் கேட்டுக் கொண்டபோதிலும் நிவேதா பெத்துராஜ் மறுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒரு நபரின் மொபைல் போனையும் அவர் தட்டிவிட்ட காட்சி வைரலானது. 

இந்த நிலையில் இந்த வீடியோ ஒருவேளை திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இருக்கலாம் என்றும் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக பல நடிகைகள் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது இது ஒரு வெப் தொடரின் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜி5 தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் தெலுங்கு வெப் தொடரில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ’பருவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த தொடருக்காக எடுக்கப்பட்ட  வீடியோ தான் வைரலான நிலையில், தற்போது இந்த வீடியோவின் இறுதியில் நிவேதா பெத்துராஜின் காரில் ஒரு பிணம் இருப்பதும் அதை இருவர் தூக்கி வைப்பதும்மான காட்சிகளுடன் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

வெப்தொடரின் விளம்பரத்திற்காக முதலில் இந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி அதன் பின் தற்போது ஜி5 தெலுங்கு சேனலின் நிர்வாகிகள் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற சீப்பான விளம்பரம் தேவையா என்று ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement