• Dec 26 2024

14 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ள கார்த்திக் படம்! மீண்டும் ஹிட்டடிக்குமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழைய திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வதென்பது சாதாரணமான விடயமாக மாறி விட்டது. புதிதாக தயாராகி வெளியாகும் திரைப்படங்களை விட ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் அதிக கலக்சன்களை காட்டுகிறது. 

அவ்வாறு ரஜினி காந்தின் பாபா , சூர்யாவின் வாரணம் ஆயிரம் , பார்த்திபனின் அழகி போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகியிருந்தது. சமீபத்தில் தனுஷின் மூணு திரைப்படம் கூட ரீ ரிலீஸ் ஆகி இது வரை ரீ ரிலீஷில் அதிக கலக்ஸன் செய்த பாபா திரைப்படத்தின் வசூலை உடைத்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகர் கார்த்திக் நடித்த "பையா" திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.


90s கிட்ஸின் பேவரட்டான காதல், ஆக்சன் , ட்ராவல் என பல காட்ச்சிகளை கொண்டு வெளியாகிய கமர்சியல் திரைப்படம் பையா ஆகும். 

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு  வெளியாகிய இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் வெளியாக உள்ளது. எதிர் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் திகதி உலகளவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement