• Dec 25 2024

சுந்தர். சியின் படங்களை பார்க்க சோறு கட்டிவரும் ரசிகர்கள்! அரண்மணை வெற்றிக்கு இது தான் காரணம்! குஷ்பூ பகிர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் சுந்தர்.சி. பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்து அதன் 2-ஆம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் தமன்னா, ராசிக்கன்னா, யோகிபாபு, கோவை சரளா என பல முன்னணி நடிகர்களும் நடிக்கும் அரண்மணை நான்காம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், சுந்தர். சி தொடர்ந்து ஏன் பேய் படங்களை இயக்குகின்றார் என அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பூ  பதிலளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


முப்பது வருடமாக சுந்தர். சி கூட நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அரண்மனை படம் நான்கு பாகங்களை வெற்றிகரமாக எடுத்ததற்கு காரணம் அவர் தான். அவர் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை எப்படி மகிழ்விப்பது என்று யோசித்து தான் செயற்படுவார்.

மேலும், எங்களது இரண்டு குழந்தைகளும் ஹாரர் படங்கள் தான் பிடிக்கும். அதனால்தான் அவரும் அதே ஜானலில் படங்களை எடுக்கிறார். 

அரண்மனை படத்தை பார்ப்பதற்கு சோறு கட்டிக் கொண்டு திரையரங்கில் குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள், இந்த வெற்றிக்கு அவர்கள் தான் காரணம். அவர்களுக்கு என்னுடைய நன்றி. 

முக்கியமாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் அவர்கள் ஒன்றாக இருக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் இதில் தமன்னாவும், ராசி கன்னாவும் அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள் என படத்தில் நடித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகள் கூறியுள்ளார் குஷ்பூ.

Advertisement

Advertisement