• Dec 26 2024

நம்ம எல்லாரையும் ஏதோ ஒன்று பிடித்து இழுக்கத் தான் செய்யும், நாம தான் உதச்சு தள்ளிட்டு மேல வரணும்.. ‘ஸ்டார்’ டிரைலர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கவின் நடித்த 'ஸ்டார்’ திரைப்படம் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவில் வீட்டை விட்டு வெளியே செல்லும் கவின் நடிகர் ஆவதற்காக படும் கஷ்டங்கள், சந்திக்கும் பிரச்சனைகள், காசு இல்லாமல் திணறும் நிலைமை, அவமானங்கள் மற்றும் கையை விட்டுப் போகும் காதலி உள்பட பல கஷ்டங்களை சந்தித்து அதன் பின் அவர் எப்படி ஒரு ஸ்டார் ஆக மாறுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. 

கவினை இதுவரை ஒரு ரொமான்ஸ் நடிகராகவும் காமெடி நடிப்பை மட்டுமே ரசிகர்கள் பார்த்த நிலையில் இந்த படத்தில் அவருடைய நடிப்பின் இன்னொரு பரிணாமம் தெரிவதை அடுத்து அவராலும் இது போன்ற கடினமான வேடங்களில் கூட நடிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளார். 

இயக்குனர் இளன், கவினின் அனைத்து நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தும் ஒரு படமாக தான் இந்த ’ஸ்டார்’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ட்ரெய்லரில் உள்ள சில அசத்தலான வசனங்கள் இதோ:

எதுக்கு என் ராசாவை திட்டிகிட்டே இருக்க, அவன் என் ராசா மாதிரி வருவான்

நீ உடனே வேலைக்கு போய் எங்களுக்கு இதையெல்லாம் செய்ய சொல்லி என்று நாங்கள் சொல்லவில்லை, நீ வேலைக்கு போகாமல் நாங்கள் கஷ்டப்படுவது போல், நீ கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன் 

‘இங்கே கற்றுக் கொள்வதற்கு கூட காசு தேவைப்படுகிறது, தகுதி தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு விட்டேன் என்று தோன்றுகிறது’ 

’நம்ம எல்லாரையும் ஏதோ ஒன்று பிடித்து இழுக்கத் தான் செய்யும், நாம தான் உதச்சு தள்ளிட்டு மேல வரணும்’  

கவின் ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.





Advertisement

Advertisement