• Dec 26 2024

திருமணத்திற்கு முன் கடைசி படம்.. மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க முயற்சிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வரும் நபர் தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது 31 வயது ஆவதால் அவரை திருமணம் செய்ய சொல்லி அவரது பெற்றோர்கள் வலியுறுத்தி வருவதாகவும் திரையுலகில் தற்போது பிஸியாக இருந்தாலும் பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு முன் ஒரு சூப்பர் படம் ஒன்றில் நடித்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது மாஸ் நடிகர் படம் இரண்டில் ஒன்றில் நடித்துவிட்டு அதன் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அவர் காய் நகர்த்தி வருவதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மட்டும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் இந்த படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ள நிலையில் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அந்த மாஸ் நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமானவர் என்பதால் கண்டிப்பாக நீங்கள் தான் நாயகி என்று உத்தரவாதம் கொடுத்திருப்பதாகவும் இதனால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement