• Dec 26 2024

"கண்டிப்பா அஜித் சாரோட வொர்க் பண்ணணும்" கீர்த்தி சுரேஷின் ஆசை.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய நாயகிகளின் வருகை ஒன்றோ இரண்டோ என வருடங்களிலோ இல்லை படங்களின் எண்ணிக்கையிலோ இருக்க அடுத்தடுத்த புது நாயகிகளின் வருகையுடன் முதல் இருந்தவர்கள் மறக்கப்படுவது தற்போது இயல்பான நிலையாக மாறியுள்ளது.

Keerthi Suresh Latest Saree Pics

அந்தவகையில் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷின் வருகை ரசிகர்களால் பெரும் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தது.அடுத்தடுத்து சிறந்த கதாபாத்திரங்கள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி என தொடர் வெற்றிகளில் பயணிந்த கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த காலங்களில் சறுக்கலை சந்தித்தார்.

Keerthi Suresh New Pics In Saree-002 ...

படவாய்ப்புகள் குறைய தமிழில் இருந்து தெலுங்கு மலையாள பக்கம் சென்ற கீர்த்திக்கு அங்கு அமோக வரவேற்புகள் கிடைத்தன.தற்போது ஹிந்தியிலும் தடம் பதித்திருக்கும் கீர்த்தி தனது கம் பாக் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

06 Keerthy Suresh Upcoming Movies in 2023 And 2024 | Keerthy Suresh New  Movies - YouTube

தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கும் கீர்த்தி தற்போது வரை நடிகர் அஜித்துடன் படங்களில் இணையவில்லை.இந்நிலையில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ஆசையை வெளிப்படையாய் சொல்லியிருக்கும் கீர்த்தி சுரேஷின் குறித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.


கீர்த்தி "'அண்ணாத்த' படத்தோட ஷூட்டிங் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தப்போ, அஜித் சார் படமும் அங்க ஷூட் போயிட்டு இருந்தது. அப்போதான் அவர்கிட்ட பேசி, என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். குட்டி உரையாடல்தான் அது. எங்க அம்மாவும் ஷாலினி மேடமும் நிறைய படங்களில் ஒன்னா நடிச்சிருக்காங்க. இப்போ வரைக்கும் அவங்க டச்ல தான் இருக்காங்க. கண்டிப்பா அஜித் சாரோட வொர்க் பண்ணணும்." என தனதாசையை சொல்லியிருந்தார். 


Advertisement

Advertisement