• Dec 25 2024

உக்கிரமான கேரக்டரில் அனுஷ்கா நடித்த 'காதி'..! வெளியானது ரிலீஸ் தேதி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

2006 ஆம் ஆண்டு வெளியான ரெண்டு படத்தின் மூலம் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர்தான் நடிகை அனுஷ்கா. அதன்பின்பு ரஜினிகாந்த், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து  மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அனுஷ்கா நடித்த படங்களில் அருந்ததி, பாகுபலி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதிலும் பாகுபலி திரைப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழிகளிலும் வெளியாகி வசூலில்  சாதனை படைத்திருந்தது.

d_i_a

தற்போது அனுஷ்காவின் ஐம்பதாவது படமான 'காதி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். சமீபத்தில் அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், க்ளிம்ஸ் வீடியோ என்பவற்றை வெளியிட்டிருந்தார்கள்.


இந்த நிலையில், காதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பிலான அறிவிப்பு அதிகார்வ பூர்வமாகவே வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி வெளியாக உள்ளதாம்.

பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம், அதிக பட்ஜெட்டிலும் உயர் மட்ட தொழில்நுட்ப தரத்திலும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement