கன்னட திரை உலகில் பிரபல நடிகராக காணப்படும் கிச்சா சுதீப், தமிழில் வெளியான 'ஈ' திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானார். இவருக்கு கர்நாடகாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசு சார்பில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் கிச்சா சுதீப்புக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விடயம் வைரலாகி வரும் நிலையில் தனது எக்ஸ் தள பக்கத்திலும் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார்.
2019 ஆம் ஆண்டு பயில்வான் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிச்சா சுதீப்க்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது அனுபமாவிற்கும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது வி ஹரிகிருஷ்ணாவுக்கு என விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களின் காரணமாக ஐந்து ஆண்டுகள் தாமதமாகவே இந்த விருது பட்டியல் கர்நாடக அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலே சிறந்த நடிகர் என்று தன்னை தெரிவு செய்து வழங்கும் மாநில அரசின் விருதை கிச்சா சுதீப் வாங்க மறுத்துள்ளார்.
இது தொடர்பில் கிச்சா சுதீப்பின் எக்ஸ் தள பக்கத்தில், எனக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்ட இருப்பதை பாக்கியமாக எண்ணுகின்றேன். சிறந்த நடிகராக என்னை தெரிவு செய்த நடுவர் குழுவிற்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கின்றேன். பல ஆண்டுகளாகவே விருது எதையும் பெறக் கூடாது என்ற முடிவில் உள்ளேன். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்தேன். அதனை தொடர விரும்புகின்றேன்.
நடிப்பிற்காக தங்களை அர்ப்பணித்த பல தகுதியான நடிகர்கள் இன்னும் உள்ளனர். இந்த விருதை நான் பெறுவதை விட அவர்கள் பெற்றால் சிறப்பாக இருக்கும். அப்படி ஒருவர் இந்த விருதை பெறுவதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி தரும். மக்களை மகிழ்விக்க எனது அர்ப்பணிப்பான பணிகள் என்றும் தொடரும். இதனை எந்த விருதையும் எதிர்பார்க்காமல் இந்த பணியை தொடருவேன்.
மேலும், என்னை தெரிவு செய்த நடுவர் குழுவில் உள்ளவர்களுக்கு நன்றி உள்ளனாக இருப்பேன். அதேபோல இந்த கௌரவத்தை நிராகரித்ததற்காக நடுவர் குழு, மாநில அரசிடம் மனதார மன்னிப்பு கேட்கின்றேன். மேலும் எனது முடிவை மதித்து எனக்கான விருப்பத்தை அங்கீகரிப்பீர்கள் என நினைக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
Listen News!