• Dec 26 2024

'கோட்' படத்தின் ரிலீஸ் திகதி, மாதம் அறிவிப்பு.. வெளியானது சூப்பர் அப்டேட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம்.

அண்மையில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு 68வது படமாக காணப்படுவது தான் கோட் திரைப்படம். இதற்கான சூட்டிங் தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இந்த படத்தில் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி மறைந்த நடிகர் விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.


இந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் திகதி வெளியாகி உள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 திகதி இந்த படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் பொறுத்து இருந்து பார்ப்போம் இதிலும் ஏதும் மாற்றம் நிகழுமா என..


Advertisement

Advertisement