• Oct 26 2024

'ரெபெல்' ஜிவி பிரகாஷுக்கு கை கொடுத்ததா? முதல் நாள் வசூல் விபரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் சாம் ஆண்டன் இயக்கிய 'டார்லிங்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், செல்ஃபி' போன்ற படங்களில் அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார்.

இவ்வாறாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து திறமையான நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன. 


ஜிவி பிரகாஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் தான் ரெபெல். இப்படத்தில் மமிதா பைஜு , வெங்கடேஷ் விபி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், ரெபெல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, ரெபெல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் முதல் நாளில் 2 கோடியை வசூலித்து உள்ளது. 

மேலும், இன்றைய தினம் விடுமுறை என்பதால் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement