• Dec 26 2024

கேபிஒய் பாலா செய்த இன்னொரு உதவி.. காலில் விழுந்து கண்ணீர் விட்ட சிறுவனின் தந்தை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா பலருக்கு உதவி செய்து வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ஒரு சிறுவனுக்கு அவர் உதவி செய்துள்ள நிலையில் அந்த சிறுவனின் தந்தை பாலாவின் காலில் விழுந்து ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட செய்யாத உதவிகளை ஒரு சில ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் மட்டுமே சம்பாதிக்கும் கேபிஒய் பாலா செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் எதிர்பாராத விபத்து காரணமாக மாதேஸ்வரன் என்று சிறுவனுக்கு கண் பார்வை போய்விட்ட நிலையில் அவரது கண் பார்வையை மீண்டும் கொண்டுவர ஒரு சில லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இது குறித்து கேள்விப்பட்ட பாலா, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் இருவரும் சம அளவில் கண் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை வழங்கி உள்ளனர்.

இந்த பணத்தை பாலா நேரில் சென்று அந்த சிறுவனின் தந்தையிடம் கொடுத்த நிலையில் அந்த சிறுவனின் தந்தை மகிழ்ச்சி அடைந்து பாலாவின் காலில் விழுந்தார். உடனே பதறிய பாலா அவரை தூக்கி நிறுத்தி. தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த சிறுவனுக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு வந்துள்ளார். இது குறித்த வீடியோ பாலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பாலாவின் உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Advertisement

Advertisement