• Dec 26 2024

180 குழந்தைகளை நான் தத்து எடுத்துக்கிறேன்.. பெண்ணிடம் வாக்குறுதி அளித்த கேபிஒய் பாலா..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தற்போது சமூக சேவைகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் குடிபுகுந்து விட்டார் என்பதும் அவர் எதிர்பாராத விதமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி செய்து இன்ப அதிர்ச்சி அளித்து வரும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கேபிஒய் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த வீடியோவில் 180 நாய்கள் வளர்க்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்ததாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது அந்த நாய்களை வளர்க்கும் பெண் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலா குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் சில விஷயங்களை கூறியுள்ளார்.



பிரபல நடிகர் ஒருவரிடம் தான் தனது நாய்களுக்காக உதவி செய்ய கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அந்த நடிகர் உதவி செய்யவில்லை என்று கூறிய அந்த பெண், கேபிஒய் பாலா கடவுள் போல வந்தார் என்றும் அந்த பாலமுருகனே வந்ததாக நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 180 நாய்களை நீங்கள் 180 குழந்தைகள் என்று சொன்னீர்கள், அந்த ஒரு வார்த்தைக்காக இந்த நாய்களுக்கு தேவையான எல்லாவற்றையும் நான் ஒவ்வொரு மாதம் அனுப்பி வைக்கிறேன், இந்த 180 குழந்தைகளையும் நான் தத்தெடுத்து கொள்கிறேன் என்று பாலா உறுதிமொழி அளித்ததோடு மட்டுமல்லாமல் முதல் மாதத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணத்தையும் அவர் அளித்து விட்டு சென்றார்.

இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே உதவி செய்து வந்த கேபிஒய் பாலா தற்போது நாய்களுக்கும் உதவி செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement