• Dec 27 2024

குஷ்புவின் மூத்த மகளுக்கு திருமணமா? அவரே அளித்த பதில்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

குஷ்புவின் மூத்த மகளுக்கு 24 வயது ஆகும் நிலையில் அவருக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

நடிகை குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே தற்போது திருமண வயதை எட்டிய உள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மூத்த மகள் அவந்திகாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தனது மூத்த மகள் அவந்திகா நடிகையாக ஆசைப்படுவதாகவும் அவருக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது என்றும், அவர் வாழ்க்கையை நன்றாக சில ஆண்டுகள் என்ஜாய் செய்யட்டும் என்றும் அதன் பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


மேலும் அவந்திகா தன்னுடைய தயாரிப்பில் திரைப்படம் நடிக்க விரும்பவில்லை என்றும், அவர் வேறு தயாரிப்பாளரின் தயாரிப்பில் சினிமாவில் நடிக்க விரும்புகிறார் என்றும், அதற்காக நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவரது விருப்பம் பூர்த்தி செய்த பின்னர் தான் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது குஷ்புவின் மகள் அவந்திகாவுக்கு 24 வயதாகும் நிலையில் இனிமேல் அவர் நடிகையாகி நடித்து அதன்பின் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குஷ்புவின் இளைய மகள் அனந்திகாவுக்கு நடிகையாகும் ஆசையில்லை என்றும் அவர் திரைக்குப் பின்னால் அதாவது தொழில்நுட்ப கலைஞராக தான் வலம் வர விரும்புவதாகவும் ஏற்கனவே சுந்தர் சி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement