• Dec 26 2024

இனிமேல் சம்பளத்தை என்கிட்ட கொடுங்க.. சரவணனுக்கு கண்டிஷன் போட்ட தங்கமயில்.. ராஜி ரொமான்ஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் சரவணன் - தங்கமயில் உரையாடும் காட்சிகள் உள்ளன. அதில் ’மீனா விஷயத்தில் நீ தேவையில்லாமல் தலையிட வேண்டாம், அவர் என்ன வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை பற்றி நீ எதுவும் சொல்ல வேண்டாம், அவங்க ஏதாவது கேட்டால் மட்டும் செய்’ என்று தங்கமயிலுக்கு சரவணன் அட்வைஸ் கூறுகிறார்.

அதன்பின் தங்கமயில் ’நீங்கள் சம்பளத்தை வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? என்று கேட்க, அதை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விடுவேன், எனக்கு செலவுக்கு தேவை என்றால் அப்பாவிடம் கேட்டு வாங்கிக்கொள்வேன்’ என்று கூறுகிறார். அப்போது தங்கமயில் ’இனிமேல் என்னிடம் சம்பளத்தை கொடுங்கள், வீட்டுக்கு தேவையான பணம் கொடுத்து விடுவோம், உங்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து விடுகிறேன், அதன் பிறகு இருக்கும் பணத்தை நம்முடைய எதிர்காலத்திற்காக சேமித்து வைப்போம்’ என்று தங்கமயில் கூறிவிட்டு சரவணனை திரும்பி பார்க்க அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து செந்தில் மற்றும் மீனா இருவரும் உரையாடும் போது, தன்னுடைய அப்பாவுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் என்றும் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று போன வருடமே திட்டமிட்டோம் என்றும் ஆனால் இப்போது அந்த வீட்டுக்குள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனா வருத்தப்படுகிறார். அவருக்கு செந்தில் ஆறுதல் கூறியதோடு ’நாம் போய் பார்த்து வாழ்த்து தெரிவிக்கலாமா’ என்று செந்தில் கேட்கிறார்.



இதனை அடுத்து ராஜி மற்றும் மீனா ஆகிய இருவரும் கோலம் போடும்போது கதிரை பற்றி பேசுகின்றனர். கதிரின் பைக்கை அவருடைய நண்பர் கேட்டது, கதிருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுவது ஆகியவற்றை ராஜி கூற, அதற்கு மீனா ஒரு ஐடியா கூறுகிறார். அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா என்பதை வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.

இதனை அடுத்து மீண்டும் சரவணன் - தங்கமயில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ’ஹனிமூன் போகலாம், மாமாவிடம் கேளுங்கள்’ என்று தங்கமயில் சொல்ல ’அது எப்படி, அப்பா அனுப்பினால் தான் ஹனிமூன் போக முடியும் என்று சரவணன் கூற, மாமாவிடம் கேளுங்கள் என்று தங்கமயில் கூறுகிறார். சரவணன் கேட்பாரா என்பதையும் பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ராஜி தனக்கும் கதிருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று இருவரது பெயர்களை பேப்பரில், கதிர் வாங்கி கொடுத்த பேனாவில் எழுதி, முடிவை பார்த்து சந்தோஷம் அடைவதுடன்  இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. நாளைய எபிசோட் முன்னோட்டத்தில் தங்கமயில் மீண்டும் சாப்பாடு கொண்டு போக, கோமதியை மீனா மற்றும் ராஜி ஏற்றி விட, உடனே கோமதி ஆத்திரத்துடன் ’தங்கமயில்’ என்று கூப்பிடுவதுடன் முடிகிறது.

Advertisement

Advertisement