• Dec 25 2024

நெப்போலியன் மகனுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா! நெகிழ்ந்து பேசிய குஷ்பூ...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷின் திருமணம் கோலாகலமாக ஜப்பானில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சினிமா பிரபலன்களான குஷ்பூ, மீனா. கலா மாஸ்டர், கார்த்தி, சரத்குமார், ராதிகா, பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய நச்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். 


தனுஷ்-அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ "நெப்போலியன் மகன் தனுஷுக்கு தனி திறமை இருக்கிறது. அவர் ஒரு தங்கமானவர். தனுஷ் சிறப்பான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் நெப்போலியனின் வீட்டில் இருக்கும். அவை அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். 


தனுஷின் திறமைதான் அவரது அடையாளம். அவரது அப்பாவின் விட்டுக்கொடுக்கும் தன்மை, அம்மாவின் அரவணைப்பு என அனைத்தும் கலந்தவர்தான் தனுஷ். அதேபோல் நெப்போலியனிடம் யாரும் முடியாது என்று சொன்னால் அது எப்படி முடியாது. நான் செய்துகாட்டுவேன் என்று செய்வார்"  என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகை குஷ்பூ. 


Advertisement

Advertisement