மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் தான் 50 வயதான இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைதள பக்கங்களில் வைரலானதோடு பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தது.
திவ்யா ஸ்ரீதர் 18 வயதிலிருந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவர் திருமணம் செய்தார். அதன் பின்பு சின்னத்திரையில் இருந்து விலகினார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆனாலும் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2019 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிந்தார்.
இதை தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்த இவர், பல சீரியல்களில் நடித்து பிஸியாக வலம் வந்தார். அதன்படி 'பத்தரமாட்டு' என்ற சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் இணைந்து நடித்த கிரிஷ் வேணுகோபாலை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் குருவாயூர் கோயிலில் ரகசியமாக நடந்தது.
இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் ட்ரென்ட் ஆனதை தொடர்ந்து இணையவாசிகள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு பதிலடி கொடுத்த திவ்யா ஸ்ரீதர், செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை.. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தை கிடைத்துள்ளார்.. வயதை காரணமாக பேசுபவர்கள் பேசட்டும் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், இவர்களின் ரிஷப்ஷன்னில் இருக்கும் வீடியோவை பார்த்த 90ஸ் கிட்ஸ் மற்றும் இளசுகள் கடுப்பில் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
அதாவது இவர்களுடைய திருமண செய்தி சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் திவ்யா ஸ்ரீதரனின் ரிசப்ஷன் வீடியோவில் அவர் வேணுகோபாலை கட்டிப்பிடித்த படியும் முத்தம் கொடுத்த படியும் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்களே வயிறு எரிது என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!