• Dec 24 2024

வெற்றி படம் கொடுத்த விஜயை உதறித்தள்ளிய லைகா.? வேட்டையன் தேற நோ சான்ஸ்! பிரபலம் பகிர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் விஜய், ரஜினி, கமலஹாசன், சூர்யா மற்றும் அஜித் ஆகியோர். இவர்களுக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் கோடிக்கணக்கில் காணப்படுகின்றது. நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் உலக அளவில் வெளியானது.

வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதன் முதல் நாள் வசூல் மட்டும் 76 கோடி என கூறப்படுகின்றது. கோட் திரைப்படம் முதல் நாளிலேயே 126 கோடிகளை வசூலித்து இருந்தது. இனிவரும் நாட்களில் விடுமுறை என்பதால் வேட்டையன் திரைப்படம் வசூலில் வேட்டை ஆடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் லைகா நிறுவனம் தமிழில் முதல் முதலாக தயாரித்த திரைப்படம் கத்தி. இது பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு லைகா நிறுவனம் விஜய் உடன் ஏன் படம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் ரஜினி, கமலை வைத்து எடுத்த தர்பார், லால் சலாம், இந்தியன் 2 ஆகிய படங்கள் எதுவுமே தேறயில்லை. வேட்டையன் படமும் தேற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகும் போது அதைப்பற்றிய விமர்சனம் பண்ணுவதிலும் அதில் உள்ள குறை நிறைகளை பற்றி எடுத்துக் கூறுவதிலும் முக்கியமான ஒருவராக ப்ளூ சட்டை மாறன் காணப்படுகின்றார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரித்த முதலாவது படம் விஜய் உடைய படம் தான் அந்தப் படம் வெற்றி படமாக அமைந்த போதும் அதற்குப் பிறகு அவர்கள் விஜயுடன் கூட்டணி வைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்று தனது கேள்வியை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Advertisement

Advertisement