• Dec 25 2024

நாளை மஞ்சுமெல் பாய்ஸை களமிறக்கும் பிரபல சேனல்.. அதிரடியாக மாற்றப்பட்ட சீரியல்களின் நேரம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஆயுத பூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை ஆகிய திரு நாட்கள் பல இடங்களிலும் இன்றைய தினம் பயபக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி சின்னத்திரை வெள்ளி திரையில் உள்ள நட்சத்திரங்களும் இதனை கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவர் விஜய் இன்றைய தினம் குறித்த தினங்களுக்கான வாழ்த்து மடலையும் பொது மக்களுக்கு தெரிவித்திருந்தார். அதைப்போல பிரபலங்களின் இல்லங்களிலும் பூஜை வழிபாடுகள் களைகட்டி இருந்தன.

இந்த நிலையில், விஜய் டிவில் ஒளிபயிரப்பாகும் சீரியல்கள் நாளைய தினம் சிறப்பாக ஒளிபரப்பாக உள்ள படங்களை முன்னிட்டு நேரமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.


அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களான சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டார் 2 ஆகிய சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. இந்த சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் காணப்படும்.

இவ்வாறான நிலையில் நாளைய தினம் விஜய் டிவியில் மஞ்சுமெல் பாய்ஸ் மதியம் 12 மணிக்கும், ரோமியோ திரைப்படம் மதியம் மூன்று மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் நாளை இரவு எட்டு மணிக்கு பாண்டியன் ஸ்டோர் 2 தொடரும், இரவு 8.30 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் இறுதியாக  சிறகடிக்க ஆசை சீரியல் 9 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement