சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், நீத்துவின் ரெஸ்டாரண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள் வைக்கப்பட்டன. அதில் முத்துவும் மீனாவும் தனித்தனியாக வைக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் கணவன் மனைவியாக வைத்த போட்டியில் மூன்று ஜோடிகளுமே தோத்து விடுகின்றார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு இடையே உள்ள சண்டை தான்.
இறுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடைசி போட்டியில் சமாதானமாகி மூன்று ஜோடிகளும் வெற்றி பெறுகின்றனர். அதன் பின் அவர்களுக்கு பரிசு வழங்கி எல்லாரும் வாழ்த்துக்களை சொல்கின்றார். அங்கிருந்த பாட்டியும் வாழ்க்கையிலும் இப்படித்தான் ஒன்றாக இருந்தால் ஜெயிக்கலாம் என்று சொல்கின்றார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாட்டி தொட்டில் ஒன்றை புதிதாக கொண்டு வந்து வைக்கின்றார். அதில் தான் விஜயா பெற்ற மூன்று மகன்களும் வளர்ந்தார்கள். அதேபோல இந்த வீட்டு வாரிசுகளும் அதில் வளர வேண்டும் என்று சொல்லுகின்றார்.
இதன் போது ஸ்ருதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இதை கேட்டு விஜயா கோபத்தில் உச்சிக்கே சென்று விடுகின்றார். ஆனாலும் தனக்கு பயமாக இருக்கின்றது அதனால் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன். இல்லையென்றால் குழந்தையே வேண்டாம் என்று சொல்லி செல்கின்றார் ஸ்ருதி. இதனால் எதுவும் இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று ரவிக்கு பாட்டி சொல்லுகின்றார்.
மறுபக்கம் மீனா திருமண டெக்கரேஷனுக்காக காரை டெக்ரேசன் பண்ணிக் கொண்டிருக்க, அதை தடுக்கும் வகையில் சிந்தாமணி பிளான் போடுகின்றார். ஆனால் அவருடைய திட்டத்தை அறிந்த மீனா அங்கு வந்த ரவுடிகளை துடப்பம் கட்டையால் அடைத்து விரட்டுகின்றார்.
இறுதியில் ஓனர் அங்கு வந்து மீனாவின் டெக்கரேஷனை பார்த்து பாராட்டியதோடு சிந்தாமணி பழைய டெக்கரேஷனை தான் பண்ணி இருப்பதாக அவருக்கு பேசிவிட்டு இனி எல்லா ஆர்டரையும் மீனாவுக்கு கொடுக்கும்படி சொல்லுகின்றார். இதனால் சிந்தாமணியிடம் மீனா யாருடைய உழைப்பையும் கெடுக்காமல் இருந்தாலே நாம நல்லா இருக்கலாம். வாழு வாழவிடு என சொல்லி அனுப்புகிறார்.
இறுதியாக மனோஜ், ரோகினியும் கோவிலுக்கு செல்ல , அங்கு மீனாவின் அம்மா அர்ச்சனை தட்டு வேண்டுமா என்று கேட்க, நாங்க வேற வேலைக்கு வந்திருக்கின்றோம் என்று முகத்தில் அடித்தால் போல பேசுகின்றார். அதன் பின்பு போலீசாருடன் மனோஜை ஏமாற்றியவரின் வீடியோவை வாங்கி எடுக்கின்றார்கள்.
இதன் போது மனோஜ் தனக்கு அந்த வீடியோவை தருமாறு போலிசாரிடம் கேட்க, அவர்கள் கொடுக்க மறுக்கின்றார்கள். மேலும் அந்த வீடியோவை தந்தால் தான் சோசியல் மீடியாவில் போட்டு அவரை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று சொல்ல, நீ காசுக்காக டிகிரி வாங்கினா? என்று போலீசார் மனோஜை திட்டி அனுப்புகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!