தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக காணப்படுபவர் தான் இயக்குநர் சங்கர். இவருடைய படங்களில் குறிப்பாக பாடல்களும் காட்சிகளும் பிரம்மாண்டமாக காணப்படும். இதனாலையே தமிழ் சினிமாவில் ஷங்கரின் படங்களுக்கு மிகப்பெரிய மவுசு காணப்படுகின்றது.
எனினும் சங்கர் தயாரிப்பில் இறுதியாக வெளியான 2 படங்களும் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்விப் படமாக மாறி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் அந்தப் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வேள்பாரி படத்திற்கு முயற்சி எடுத்துள்ளார் சங்கர். இதனை யார் தயாரிக்க முன்வர போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும் பிரம்மாண்டம் என இந்த காலத்திலும் ரசிகர்களை திருப்தி படுத்த முடியாது. படத்தின் கதையில் தான் பிரம்மாண்டம் இருக்க வேண்டும். மேலும் பிரம்மாண்டத்திற்காக கதை தேவையில்லை என்பதை பாகுபலி, RRR போன்ற படங்கள் உணர்த்திவிட்டன.
இந்தியன் 2, ம் கேம் சேஞ்சர் ஆகிய படங்களின் தோல்விகளால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை அடைந்துள்ளார்கள். எனவே இந்தியன் 3 திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதும் சந்தேகம் தான். தற்போது வேள்பாரி என்னும் மெகா பட்ஜெட் படத்திற்கு தயார் என்று கூறியுள்ளார். அதுவும் மூன்று பாகங்கள்..
ஒரு பாகத்திற்கே மிகப்பெரிய பட்ஜெட்டை போடும் சங்கர் இந்த மூன்றுக்கும் குறைந்தது 1300 கோடி ஆவது பட்ஜெட் வைக்கலாம். ஆனால் இவருடைய மார்க்கெட்டை நம்பி இந்த ரிஸ்க் எடுக்கப் போகும் தயாரிப்பாளர் யார்? பலரும் யோசிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உலகின பல அழகிய லொக்கேஷன்களை 4K வில் துல்லியமான டிவி மூலம் பார்க்கும் காலமிது.
Mr.Beast எனும் உலகின் நம்பர் 1 யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்.. திரைப்படங்களை விட பிரம்மாணட செலவில்வீடியோககளை போடுகிறார்.
நம்மூர் வில்லேஜ் குக்கிங் சேனல்.. சமையலை பிரம்மாண்டமாய் செய்து அசத்துகிறது.… pic.twitter.com/1AolX3IbER
Listen News!