• Dec 27 2024

'மாஸ்டர்’ படத்தின் பல காட்சிகள் காப்பி.. லோகேஷ் கனகராஜ் இன்னொரு அட்லியா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் கொரோனாவுக்கு பின் வெளியான மிகப்பெரிய வெற்றி படம் இது என்று கருதப்பட்டது. 


இந்த படம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவருக்குமே ஒரு வெற்றி படமாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பல காட்சிகள் மலையாள திரைப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர். 


கடந்த 1989 ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான ’முத்ரா’ என்ற திரைப்படத்தில் உள்ள காட்சிகளும் 'மாஸ்டர்’ திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளும் அப்படியே ஒரே மாதிரி இருப்பதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனை அடுத்து 'முத்ரா’ படத்தை பார்த்து தான் 'மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கிறார் என்றும் அவர் இன்னொரு அட்லி என்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 


'மாஸ்டர்’ படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் முழுக்க முழுக்க மலையாள படத்தின் காப்பி மூலம் தான் இந்த பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் உள்ள கேரக்டர்கள் வசனங்கள் காட்சிகள் அப்படியே ’முத்ரா’ படத்துடன் ஒத்துப் போவதாகவும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement