• Dec 25 2024

போதை கதைன்னாலே பக்கத்துல வராதே.. லோகேஷை அடித்து விரட்டிய பிரபல ஹீரோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பான் இந்திய ஸ்டாரிடம் ஒரு கதை கூறிய போது இந்த மாதிரி போதை கதை எல்லாம் எடுத்துக்கொண்டு என்னுடைய பக்கத்திலேயே வராதே என்று அடித்து விரட்டி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய ஐந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ’கைதி 2’ ‘விக்ரம் 2’ ’ரோலக்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்குவதாக கூறப்பட்டாலும் அதற்கு முன்பே அவர் பிரபாஸ் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இந்த படத்திற்காக கதை சொல்ல பிரபாஸை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ் வழக்கம்போல் தனது போதை சம்பந்தப்பட்ட கதையை கூற உடனே கதை சொல்வதை நிறுத்த சொன்ன பிரபாஸ், ‘தயவுசெய்து போதை கதை எல்லாம் கொண்டு என்னிடம் வராதீர்கள், வேறு ஏதாவது கதை இருந்தால் மட்டும் சொல்லுங்கள்’ என்று அனுப்பி வைத்து விட்டதாகவும் இதனால் லோகேஷ் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. 

போதை மருந்து என்பது கிட்டத்தட்ட லோகேஷின் அனைத்து படங்களிலும் ஒரு கேரக்டராகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் இனியாவது அவர் அடுத்தடுத்த படங்களில் அந்த போதை கதையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்கள் அறிவுரை கூறி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement