• Dec 25 2024

'தனிமை தான் அவளிடம் அடிமையாகி விட்டது' தினேஷின் பிக்பாஸ் என்ட்ரிக்கு பின் ரட்சிதா மீண்டும் போட்ட எமோஷனல் பதிவு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.



இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தினேஷ் எண்ட்ரிக்கு பின்னர் நடிகை ரச்சிதா. போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் 'எனக்கு நீ உனக்கு நான்' என்று கூறி அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். 

தற்போது, 'தனிமை தான் அவளிடம் அடிமையாகி விட்டது' என்று கூறி சோகத்துடன் எடுத்த வீடியோ ஷார்டினை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் ஆறுதலான கருத்துக்களை தற்போது தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement