• Dec 25 2024

பாக்கியாவிற்கு ஆதரவாக கோபியுடன் சண்டையிட்ட ராதிகா! 'நீயும் மாலினியும் ஒன்னுடி' ராதிகாவை விளாசிய ஈஸ்வரி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இதுவரை, இனிமேல் நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன்,என் குழந்தைக்கும் இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என வீட்டை விட்டு கிளம்புகின்றார் ஜெனி.

இன்றைய எபிசோட்டில், ஜெனி வீட்டை விட்டு கிளம்பவும் செழியன் அழுது கொண்டு 'அம்மா அவள போக வேணா என்று சொல்லுங்க' என்று சொல்ல, கோவத்தில் 'எல்லாம் உன்னால தான்' என செழியனை போட்டு அடிக்கிறார் பாக்கியா. 


அதேவேளை, ஜெனி பின்னால் ஓடிச் செல்லும் செல்வி அக்கா அவரை சமாதானம் செய்ய முற்பட அவரை என் பின்னால வர வேணாம் என கெஞ்சி அனுப்புகிறார்.அந்த இடத்திற்கு வந்த ராதிகா, 'என்னாச்சு ஜெனி குழந்தையோட எங்க கிளம்பிட்ட. செழியன் உன் கூட வரலையா' என கேக்க அவன பத்தி கேக்காதைங்க என அழுகிறார்.சரி கார்ல ஏறு நான் உன்ட வீட்ட கொண்டு போய் விடுறன் என சொல்கிறார். இதையடுத்து காரில் ஏறிய ஜெனியிடம் மீண்டும் ராதிகா விசாரிக்க செழியன் என்ன ஏமாத்திட்டான் என நடந்ததை சொல்கிறார்.

இதையடுத்து ஜெனியின் வீட்டிற்கு ராதிகாவும் செல்கிறார். அவரை வீட்டில் விட்டுட்டு எல்லாம் சரியாகிடும் ஜெனி என்று சொல்லி செல்கிறார் ராதிகா. அதன்பின் ஜெனியின் அம்மா கேட்கவும் நடந்ததை சொல்லி அழுகிறார் ஜெனி.



இன்னொரு பக்கம் ஜெனி வீட்டுக்கு போய்ட்டால என எல்லாரும் பதற்றத்தில் நிக்க, கோபியும் ஈஸ்வரியும் பாக்கியவை திட்டுகின்றனர்.அந்த இடத்திற்கு கையை தட்டிக் கொண்டு உள்ளே வருகிறார் ராதிகா. பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகிறார். 'தப்பு எல்லாம் ஆம்பிளைங்க பண்ணிட்டு பழிய பொம்பிளைங்க மேல போடுறீங்களா' என எல்லாரையும் விளாசி தள்ளுகிறார். இடையில் ஈஸ்வரி உன்ன வாய மூட சொல்கிறார். அத்துடன் 'நீயும் மாலினியும் ஒன்னு தாண்டி என சொல்ல, நோ நானும் மாலினியும் ஒன்னு இல்ல.கோபியும் செழியனும் தான் ஒன்னு' என்று சொல்கிறார் ராதிகா. கோபி ராதிகாவை உள்ளே இழுத்துச் செல்கிறார்.

மீண்டும் பாக்கியாவை திட்டி செல்கிறார் ஈஸ்வரி.அந்த இடத்தில் பாக்கியாவுக்கு ஆதரவாக எழில், இனியா , அமிர்தா நிக்கின்றனர்.

Advertisement

Advertisement