தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான சமந்தா ராஜ் நிடிமொருவை கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தவர் சமந்தா. ஆனாலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2021 ஆம் ஆண்டு பிரிந்தார். அதற்கு பிறகு சோபிதா துலிபலாவை மறுமணம் செய்தார் நாக சைதன்யா.
இதற்கிடையில், சமந்தா ஒருவித தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகி தொடர்ச்சியாக சிகிச்சைகளை மேற்கொண்டார். அதற்கு பின்பு ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்தார்.
அப்போது அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பொதுவெளியில் இருவரும் சுற்றி தெரியும் போது பல கிசுகிசு தகவல்கள் வெளியானது. அதற்கு பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் அவர்கள் என்ஜாய் பண்ணிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!