பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், அதில் போட்டியாளர்களாக காணப்படும் பார்வதி கமருதீன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது 12 வாரங்களை கடந்துள்ளது. அதில் தற்போது போட்டியாளர்களாக பார்வதி, கமருதீன், சாண்ட்ரா, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன் மற்றும் சுபிக்ஷா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக இருந்து வருகின்றனர்.
வழக்கமாக 13 வது வாரத்தில் நடத்தப்படும் டிக்கெட் டு பினாலே போட்டிருக்கு தேர்வானப் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் முதலாவதாக சுபிக்ஷா வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பார்வதி சாண்ட்ராவிடம் கமருதீன் பற்றி பேசுகின்றார். அதன்படி அவர் கூறுகையில், ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கூட இருந்த பொண்ணு அப்படி என்று யோசிக்கணும் ஒரு பையன்.. நமக்குள்ள என்ன இருந்தாலும் அதை வெளியே போய் பேசிக்கலாம்.. நான் எதிலையும் லாக் ஆக மாட்டேன். இந்த கேம்ல தான் லாக் ஆனேன் என்று பார்வதி கூறினார்.
அதற்கு சாண்ட்ரா, எனக்கு அவருடைய அர்ஜெண்டா பிடிக்கவில்லை. அவருடைய பிஹேவியர், அவருடைய வார்த்தை பிரயோகங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அவருக்கு உள்ள ஒருத்தன் இருக்கான் இல்ல, அந்த ஒரிஜினல் வெர்ஷன் அப்பப்ப வெளிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!