• Dec 25 2024

என்ன கோபி அதிர்ஷ்ட லட்சுமி வந்துட்டா போல..! கிளவுட் கிச்சன் ஓப்பினிங் யாரு தெரியுமா? பாக்கியா எஸ்கேப்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், வீட்டார்களிடம் கிளவுட் கிச்சின் ஆரம்பிப்பது தொடர்பாக கோபி சொல்கிறார்.கிளவுட் கிச்சின் என்றால் என்னவென்று ஈஸ்வரி கேட்க, அதற்கு விளக்கம் கொடுக்கிறார் செழியன்.

மறுபக்கம் எழில், பாக்கியா, அமிர்தா மூவரும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க,  கிச்சனுக்கு வந்த கோபி அவர்களிடம் வம்பு இழுக்கிறார். அதற்கு எழில் நீங்க எங்க அம்மாவுக்கு போட்டியா? என்று கேட்க, உங்க அம்மாவோட நான் எதுக்கு போட்டி போடணும். அவ என்னை வேலைக்கு கூப்பிட்டத மறக்க மாட்டேன் அப்படி என்று சொல்கிறார். மேலும் எனக்கு 25 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு உங்க அம்மா இதுவரைக்கும் ஒரு விஷயத்தை உருப்படியா செஞ்சி இருக்காவா என்று கிண்டல் அடிக்கிறார்.

உங்க அம்மாவ ஒரு ஆளா நான் மதிக்கிறதே கிடையாது. அப்புறம் எப்படி போட்டி என்று நினைப்பேன் . அப்படி உன் மனசுல ஒரு எண்ணம் இருந்துச்சுன்னா அதை டெலிட் பண்ணிடு என சொல்கிறார் கோபி.


இன்னொரு பக்கம் நைட் தூங்கும்போது இனியா போன் பார்த்துக் கொண்டிருக்க, அதை வைத்து விட்டு தூங்குமாறு பாக்கியா  சொல்கிறார். ஆனாலும் 5 நிமிடம் இன்னும் 5 நிமிடம் என்று இனியா போன் பார்க்கிறார். இதன் போது நான் வேலையில் உன்னை கவனிக்கல என்று மிஸ் பண்றியா என கேட்க, அப்படி இல்லை இப்போ தான் உன் அட்வைஸ் இல்லாம ஜாலியா இருக்கன் என்று இனியா சொல்கிறார்.  

மறுநாள் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு செல்ல வெளிக்கிட, அங்கு வந்த ராதிகா கோபியும் எல்லாரையும் அழைத்து கிளவுட் கிச்சன் ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்தாச்சு நாளைக்கு ஓபன் பண்ண போறோம் என எல்லாருக்கும் ஷாக் கொடுக்கிறார்கள்.

அதை ஓபன் பண்றதுக்கு யார கூப்பிட போறீங்க என இனியா  கேட்க, அது வேற யாரும் இல்ல எங்க அம்மா, அப்பா தான். அவங்க தான் எனக்கு எல்லாம் என ஐஸ் வைக்கிறார் கோபி. அதற்கு ஈஸ்வரி கண் கலங்குகிறார்.

கோபியின் நடிப்புகளை பார்த்துவிட்டு எழிலும், பாக்கியாவும்  கிளம்பி செல்கிறார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement