• Apr 19 2026

குக் வித் கோமாளி புகழ் உடன் இணைந்த மதன் கெளரி.. இருவரும் சேர்ந்து செய்த நெகிழ்ச்சியான செயல்..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வடிவேல் பாலாஜியின் டீமில் இடம் பெற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்த புகழ், குக் வித் கோமாளி மூலம் மிகப் பிரபலமாகிவிட்டார். 

இவருக்கு தனியாக பேன்ஸ் பேஜே உருவாகிவிட்டது. அந்த நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை வென்ற புகழ் தற்போது படங்களிலும் நடித்த வருகிறார்.



இந்நிலையில், தற்போது புகழ் மற்றும் யூடியூப் பிரபலமான மதன் கௌரி ஆகியோர் இணைந்து ஆர்த்தி என்ற பெண்ணின் சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டிக்கொண்டுள்ளார்கள்.


இதன் முதல் கட்டமாக குறித்த பெண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு தமது ரசிகர்களிடம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கோரியுள்ளனர். 

மேலும், குறித்த பெண் பல மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்பட்டுவரும் நிலையில், அவருக்கு லிவர் ட்ரென்பார்மத்தின் நடக்க உள்ளதாகவும் அதற்கு மக்களிடம் நிதி உதவியை கோரிய அவர்கள், டொனேஷன்செய்வதற்கான  QR கோட்டையும் வெளியிட்டுள்ளனர். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement