• Dec 26 2024

போலோ ஜிடி கார் முதல் BMW பைக் வரையில்.. மஞ்சும்மல் பாய்ஸ் குட்டனின் காஸ்ட்லி கார் கலெக்ஷன்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் இருநூறு கோடியை நெருங்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், தமிழ் நாட்டிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது.

சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான இளம் நடிகர்கள் நடித்திருந்தாலும் அந்த படத்தில் சுபாஷாக நடித்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் குட்டனாக நடித்திருந்த செளபின் சாஹிரின் நடிப்பு வேற லெவலில் சம்பவம் செய்திருந்தது.

அந்த அளவுக்கு அவர்களது யதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர்.

அத்துடன் மரணத்தின் விளிம்பில் சிக்கியிருந்த தனது நண்பனை காப்பாற்ற துணிச்சலாக குகைகளுக்கு இடையில் இறங்கி, தன் உயிரை பணையம் வைத்து மரணத்தில் இருந்து அவரை மீட்டு வரும் காட்சிகள் தியட்டரை அலறவிட்டுள்ளது.


இவ்வாறு மலையாளத்தில் தொடர்ந்தும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் செளபின் சாஹிரின், மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகியிருந்தார்.

இந்த நிலையில், மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்  செளபின் சாஹிரின் சொகுசு வாகனங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அதன்படி அவரிடம் உள்ள சொகுசு கார் வரிசையில், லெக்சஸ் ES 300H காரும் ஒன்று . இந்த காரின் விலை சுமார் 70 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் அவரிடம் உள்ள விலை உயர்ந்த கார் என்றால் அது, லெக்சஸ் ES 300H கார் தான். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த காரின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடியாம்.


அது மட்டுமின்றி அவரின் கார் கலெக்ஷனில் மகேந்திரா நிறுவனத்தின் டாப் டாப் செல்லிங் காரான தாரும் இடம்பெற்றுள்ளது. அந்த காரின் விலை 15 லட்சம் என கூறப்படுகிறது.


அதைப்போல மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸும் ஒன்று. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 85 லட்சம் கூறப்படுகிறது.


கடந்த 2016 ஆம் ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்திய போலோ ஜிடி காரும் அவரிடம் உண்டு. அது சுமார் 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


இவ்வாறு நடிகர் செளபியனிடம் கார்கள் மட்டும் இன்றி பிஎம்டபிள்யூ பைக்கும் சொந்தமாக வைத்துள்ளார். அவரிடம் உள்ள BMW R 1250 GS மாடல் இன் விலை 23 லட்சம் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement